2008-11-19 13:52:01

காங்கோ ஆயர்கள் – எங்கள் அழுகுரல்கள் கேட்கப்படவில்லை


நவ.19,2008. காங்கோவில் தொடர்ந்து இடம் பெற்று வரும் சண்டையில் ஏற்படும் இழப்புகளால் நாடு முழுவதும் ஆறுதல் கூற முடியாத அளவு துயரத்தில் மூழ்கியுள்ளது என்று அந்நாட்டு ஆயர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

காங்கோ ஜனநாயக குடியரசின் தேசிய ஆயர் பேரவையின் நிலைத்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் தலைவர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் கூறுகிறது.

சண்டை இடம் பெறும் கீவு மாகாணத்தில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனில் சகிக்க முடியாத விளைவுகளை எதிர் நோக்க வேண்டியிருக்கும் என்றும் ஆயர்களின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

காங்கோவில் மலிந்து கிடக்கும் இயற்கை வளங்களே இச்சண்டைக்குக் காரணம் என்று கூறும் ஆயர்கள், இவ்வெண்ணற்ற வளங்கள் காடுகலாக மாறிவிடக் கூடாது, இவை அந்நியர் வசம் சென்றுவிடாதிருப்பதில் நாட்டு மக்கள் கவனமாக இருக்குமாறும் கேட்டுள்ளனர்.

ஐ.நா.அமைதிகாக்கும் படைகள் காங்கோவில் அமர்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.