2008-11-18 14:24:10

பொருளாதார நிபுணர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்வோர் நுகர்வோரைக் குழப்பி வருகின்றனர் - திருப்பீடச் சார்பு தினத்தாள்


நவ.18,2008. உலக அளவில் நிலவும் நிதி நெருக்கடிகள் மக்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ள வேளை, பொருளாதார நிபுணர்கள் நுகர்வோரைக் குழப்பி வருகின்றனர் என்று திருப்பீடச் சார்பு தினத்தாள் லொசர்வாத்தோரே ரொமானோ குறை கூறியது.

இப்போதைய நிதி நெருக்கடிகளால் ஏற்பட்டுள்ள ஏழ்மையை மேற்கொள்வதற்குக் கடன் வாங்கியாவது பொருட்களை வாங்குவதும் பணத்தைச் செலவழிப்பதுமே ஒரே நிவாரணம் என்று, தங்களைப் பொருளாதார நிபுணர்கள் என்று அழைத்துக் கொள்வோர் நுகர்வோரிடம் கூறிவருகின்றனர் என்று அத்தினத்தாள் குறிப்பிட்டுள்ளது.

வாஷிங்டனில் அரசுத் தலைவர்களும் பிரதமர்களும் கலந்து கொள்ளும் ஜி-20 மாநாட்டில் நிதி நெருக்கடியை மேற்கொள்வதற்கான உறுதிப்பாடுகள் குறித்து திருப்தி ஏற்பட்டுள்ள இவ்வேளையில், அம்மாநாட்டில் மிக ஏழை நாடுகள் குறித்து எதுவும் பேசப்படவில்லை என்று அத்தினத்தாளில் கட்டுரை எழுதியுள்ள மிலான் திருஇதய கத்தோலிக்க பல்கலைக் கழக நிதிநன்னெறியியல் பேராசிரியர் எத்தோரே கோத்தி தெதஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

 








All the contents on this site are copyrighted ©.