2008-11-18 20:46:24

காரித்தாஸ் எய்ட்ஸ் நோயுற்ற குழந்தைகளுக்கு அதிகக் கவனம் .18,நவம்பர்,08.


வரும் டிசம்பர் மாதம் முதல் தேதி அகில உலக எய்ட்ஸ் தினம் நினைவு கூறப்படுகிறது . அகில உலகக் காரித்தாஸின் தலைவர் கர்தினால் ஆஸ்கர் ரொட்ரீகுவஸ் மாராடீகா இம்மாதம் 17 ஆம் தேதி வெளியிட்ட செய்தியில் உலகின் எய்ட்ஸ் நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு நோய் தடுக்கும் மருந்துகள் இருப்பதாகக் கூறினார் . தற்பொழுது 15 விழுக்காடு குழந்தைகளே இதற்கான மருந்தைப் பெற்றுப் பயனடைகிறார்கள் . பலர் 2 வயதுக்கு முன்னரே இறந்துவிடுவதாக கர்தினால் மாராடீகா தெரிவித்தார் . குழந்தைகளைக் காக்க நல்ல மருந்துகளைத் தயாரிக்க நாடுகளும் , மருந்து தயாரிப்பாளர்களும் முன் வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் கர்தினால் . 2009 ஆம் ஆண்டில் குழந்தைகளைக் காப்பதே காரித்தாஸின் 162 மையங்களின் முன்னுரிமையாக இருக்கும் என மேலும் கூறினார் காரித்தாஸ் தலைவர் கர்தினால் ஆஸ்கர் ரொட்ரீகுவஸ் மாராடீகா .








All the contents on this site are copyrighted ©.