2008-11-18 14:25:08

கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இக்காலத்தில் கிறிஸ்தவர்கள் பயப்படுவதை விட்டு விசுவாசத்திலும் குடும்பத்திலும் கவனம் செலுத்த அழைப்பு - அமெரிக்க கர்தினால் ரோஜர் மகோனி


நவ.18,2008. அமெரிக்கா கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இக்காலத்தில் கிறிஸ்தவர்கள் பயப்படுவதை விட்டு விசுவாசத்திலும் குடும்பத்திலும் கவனம் செலுத்துமாறு அந்நாட்டு லாஸ் ஆஞ்சலீஸ் கர்தினால் ரோஜர் மகோனி கேட்டுக் கொண்டார்.

பொருளாதாரம் குறித்த புதிய ஆன்மீகச் சிந்தனை என்ற தலைப்பில் விரிவான மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள கர்தினால் மகோனி, நன்றி செலுத்துதல் மற்றும் கிறிஸ்துமஸின் உணமையான அர்த்தம் பற்றிச் சிந்திப்பதற்கு பொருளாதார நெருக்கடி இவ்வாண்டில் குடும்பங்களுக்கு நல்ல வாய்ப்பை அளித்துள்ளது என்றார்.

இப்பொருளாதார நெருக்கடிகள், நன்றி செலுத்துதல் மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறைக் காலத்தில் நடக்கிறதே என்று பலர் கவலைப்படுகின்றனர் என்றுரைக்கும் அவ்வறிக்கை, உணமையான நன்றியறிதல் என்பது வீடுகளில் நண்பர்களோடு எளிமையாக அதனைக் கொண்டாடி ஏழைகளுக்குத் தங்கள் உணவைப் பகிர்ந்தளிப்பதாகும் என்றும் கூறுகிறது.

மேலும் நிதி நெருக்கடி காரணமாக அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் சிட்டி குழும வங்கி மிகப்பெரிய அளவில் வேலைக்குறைப்பை அறிவித்துள்ளது.

ஐம்பதாயிரம் பேர் வேலையிழப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 23000 பணியிடங்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனுடன் கூடுதலாக இந்த ஐம்பதாயிரம் வேலை இழப்புகளை சிட்டி வங்கி அறிவித்திருக்கிறது







All the contents on this site are copyrighted ©.