2008-11-18 14:22:57

உண்மையான வெற்றி என்பது பகுதிகளைக் கைப்பற்றுவதில் அல்ல மாறாக நாட்டில் நிலையான அமைதி நிலவுவதே – இலங்கை கத்தோலிக்கர்


நவ.18,2008. இலங்கை ராணுவம் தமிழ் விடுதலைப் புலிகளின் தளங்களைக் கைப்பற்றி வருவதைக் கொண்டாடுமாறு அரசு அறிவித்துள்ள வேளை, உண்மையான வெற்றி என்பது பகுதிகளைக் கைப்பற்றுவதில் அல்ல மாறாக நாட்டில் நிலையான அமைதி நிலவுவதே என்று அந்நாட்டு சிங்கள மற்றும் தமிழ்க் கத்தோலிக்கர் கூறியுள்ளனர்.

நாட்டின் வடபகுதியில் ஆயிரக்கணக்கான அப்பாவி குடிமக்கள் இன்னும் துன்புற்றுக் கொண்டிருக்கும் போது வெற்றியைக் கொண்டாடும் நேரமா இது என்ற கேள்வியையும் கத்தோலிக்கர் எழுப்பியுள்ளனர் என்று ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.

பூனேரின் பகுதியை இராணுவம் கைப்பற்றியதைத் தொடர்ந்து வீரத்துவமான படைவீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அதிபர் மகிந்த ராஜபக்சே. அதோடு அரசு, நேற்று நிருபர் கூட்டங்களைக் கூட்டி குடிமக்கள் உட்பட பள்ளிகள், அலுவலகங்கள், அரசு கட்டிடங்கள், வீடுகள், வாகனங்கள் என அனைத்திலும் தேசியக் கொடி ஏற்றிக் கொண்டாடுமாறு கேட்டுள்ளது.

இதற்கிடையே ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அதிபர் ராஜபக்சே ஓராண்டு பதவி நீடிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார் என ஊடகங்கள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.