2008-11-17 20:30:46

லெபனானின் அமைதியைக் காக்க திருத்தந்தை வேண்டுகிறார். 17, நவம்பர் ,08 .


லெபனான் மக்களின் நாட்டுப்பற்று அந்நாட்டில் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் , டுரூஸ் இனத்தவரும் இணைந்து வாழ்ந்து , ஒற்றுமையாகப் பணி செய்வதில் காட்டப்பட வேண்டும் எனத் திருத்தந்தை கேட்டுக்கொண்டார் . லெபனானின் சமய , கலாச்சாரச் செல்வங்கள் அந்நாட்டு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது . அக்கொடையைக் காத்து வளமுள்ளதாக்க வேண்டும் என வத்திக்கான் திருப்பீடத்துக்கான லெபனான் நாட்டின் புதிய அரசுத் தூதர் ஜார்ஜஸ் சக்கிப் எல் கெளரியிடம் திருத்தந்தை கூறினார் . இத்திங்கட்கிழமை காலையில் லெபனான் நாட்டின் புதிய தூதர் ஜார்ஜஸை வரவேற்றுப்பேசிய திருத்தந்தை ,அகில உலகமும் லெபனான் நாட்டில் அனைவரும் அமைதியுடன் வாழ அந்நாட்டைக் கட்டி எழுப்ப உதவ வேண்டும் எனவும் , அந்நாட்டை சண்டைக்களமாக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார் .








All the contents on this site are copyrighted ©.