2008-11-17 14:08:18

நவம்பர் 18 - புனித பேதுரு பவுல் பேராலய அர்ச்சிப்பு


திருத்தந்தை புனித அனாக்ளீட்டஸ் கி.பி. 83ஆம் ஆண்டில் வத்திக்கான் குன்றின் அடிவாரத்தில் புனித பேதுருவின் கல்லறை மீது சிற்றாலயம் ஒன்றைக் கட்டினார். நாளடைவில் இதே இடத்தில் மன்னன் கான்ஸ்ட்டைன் மிகப்பெரிய பேராலயம் ஒன்றைக் கட்டினார். உலகப் புகழ் பெற்ற கலைஞர் மைக்கிள் ஆஞ்சலோவின் யுக்தியின்படி இப்போதைய பசிலிக்கா 16ம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டது. 50 ஆயிரம் பேர் அமரக்கூடிய இப்பசிலிக்காவை இதே நாளில் திருத்தந்தை 7ம் உர்பான் திருநிலைப்படுத்தினார். மேலும், திருத்தந்தை புனித அனாக்ளீற்றஸ் புனித பவுலின் நினைவாக 395ம் ஆண்டில் 400 அடி நீளம் கொண்ட பேராலயம் ஒன்றை ஓஸ்தியா செல்லும் சாலையில் கட்டினார். தியடோசியன் என்னும் பெயர் கொண்ட இப்பேராலயம், 1823ல் பெரியதோர் தீ விபத்தால் சேதமானது. பின்னர் அது புதுபிக்கப்பட்டு தற்போது கம்பீரமான தோற்றத்துடன் அனைவரையும் கவர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் புனிதர்கள் பேதுரு பவுல் பேராலயங்கள் அர்ச்சிப்பு விழா நவம்பர் 18ந்தேதி சிறப்பிக்கப்படுகின்றது.

சிந்தனைக்கு – இருட்டு விலகட்டும், விலகாமலும் போகட்டும், ஆனால் உன் விரல்கள் வெளிச்சம் ஏற்றுவதை நிறுத்தக் கூடாது.








All the contents on this site are copyrighted ©.