2008-11-16 20:23:49

அமெரிக்கக் கிறிஸ்தவத் தலைவர்கள் ஒரிசாக் கிறிஸ்தவர்களைக் காக்க அமெரிக்க அதிபரிடம் வேண்டுகோள் . 16, நவம்பர் ,08.


ஒரிசாவில் வன்முறை காரணமாக அவதியுறும் மக்களுக்காக இந்திய அரசிடம் இதனை நிறுத்த ஆவன செய்யக் கோருமாறு அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிடம் அமெரிக்க ஆயர்கள் குழுவின் அகில உலக நீதி மற்றும் அமைதி மன்றத்தின் செயலர் ஆயர் தாமஸ் வென்ஸ்கி , மற்றும் 24 கத்தோலிக்கத் தலைவர்கள் பரிந்துரை செய்துள்ளனர் . மதச் சுதந்திரம் ,மற்றும் மதத்தைப் பிரகடனப்படுத்த இந்தியா கொண்டுள்ள அரசியல் சாசனப்படி ஆட்சிபுரியத் தவறிய இந்திய அரசை ஒரிசாவில் நடைபெறும் வன்முறைகளுக்குப் பொறுப்பேற்குமாறு உடனடியாக தட்டிக்கேட்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்டனர் . உலகின் மிகப்பெரிய மக்களாட்சியைக் கொண்ட இந்தியா, அரசு சாசனத்தை மதித்துக் காப்பாற்றுவதை உலகறியக் காட்டவேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர் . அமெரிக்க அரசு இந்தியாவில் நடக்கும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளை வெறுப்பதாக திரு. மன் மோகன் சிங் அவர்களுக்குத் தெரிவிக்குமாறும் அதிபர் புஷ்ஷிடம் கேட்டுக் கொண்டுள்ளனர் . வன்முறையைக் கையாளுபவர்களையும் , அதனை தடுக்காத ஒரிசா மாநில அரசையும் இந்தியச் சட்டப்படி செயல்பட கடுமையாக எச்சரிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர் .








All the contents on this site are copyrighted ©.