2008-11-15 14:04:10

புதிய கத்தோலிக்கத் தலைமுறை அரசியலில் பங்கேற்க ஊக்குவிக்கப்படவேண்டும் – திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


நவ.15,2008. திருப்பீட பொதுநிலையினர் அவை நடத்திய ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஏறத்தாழ 90 பிரதிநிதிகளை இன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொரு செயலிலும் விசுவாசத்திற்கும் வாழ்வுக்குமிடையேயான ஒன்றிப்பை ஒளிரச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

கடும் வறுமையில் வாடுவோர், துன்புறுவோர் தேவையில் இருப்போர் ஆகியோர் மீதும் அக்கறை காட்டுமாறும் கேட்டுக் கொண்ட திருத்தந்தை, மாண்பில் சமமாக இருக்கும் ஆண்களும் பெண்களும் திருமணம் மற்றும் குடும்பத்தில் மட்டுமல்ல, சமுதாயத்திலும் தங்களின் கூறுகளுக்கு ஏற்ப ஒத்துழைப்பை வழங்குமாறும் வலியுறுத்தினார்.

கிறிஸ்தவப் பெண்கள் திருச்சபையில் நலவாழ்விலும் நற்செய்தியை அறிவிப்பதிலும் ஆற்றிவரும் பணிகளை ஊக்குவிப்பதாகவும் தெரிவித்தார் அவர்.

தற்போதைய கலாச்சார சமூக நிலைகளையும் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, இளையோர்க்கான கல்வி மற்றும் மேய்ப்புப்பணியில் அக்கறை காட்டுமாறும் திருப்பீட பொதுநிலையினர் அவையிடம் கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.