2008-11-15 14:09:20

ஆகஸ்ட் 25 – இந்திய கிறிஸ்தவ மறைசாட்சிகள் தினம்


நவம்.15,2008. ஆகஸ்ட் 25 ம் தேதியை இந்திய கிறிஸ்தவ மறைசாட்சிகள் தினமாகக் கடைபிடிப்பதற்குத் தீர்மானித்துள்ளது மத்திய பிரதேச இசை மகாசங்க அமைப்பு.

இசை மகாசங்கம் 2008 என்ற தலைப்பில் போபாலில் கிறிஸ்தவ பொதுநிலையினர் அமைப்பு நடத்திய இரண்டு நாள் கூட்டத்தில் ஆகஸ்ட் 25ம் தேதியை இந்திய கிறிஸ்தவ மறைசாட்சிகள் தினமாகக் கடைபிடிப்பதற்குத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்த போபால் பேராயர் லியோ கொர்னேலியோ, ஒரிசா கிறிஸ்தவர்களின் தியாகம் வெகு சிறப்பான முறையில் நினைவுகூரப்பட வேண்டும், இது அவர்களின் மறைசாட்சிதனத்தை மிக அசாதாரண முறையில் நினைவுகூருவதாக இருக்கின்றது என்றார்.

கந்தமாலில் அதிக அளவில் கிறிஸ்தவர்கள் ஆகஸ்ட் 25 ம் தேதி தங்கள் உயிரைத் தியாகம் செய்தார்கள், அவர்களைக் கவுரவப்படுத்த கிறிஸ்தவ பொதுநிலையினர் அமைப்பு விரும்புவதாககவும் இத்தகைய செயல் மக்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்தும் எனவும் அருட்திரு ஆனந்த் மொட்டுங்கல் கூறினார்.

இம்மாதம் 27ம் தேதி சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதை முன்னிட்டு அதற்குக் கிறிஸ்தவர்களைத் தயார் செய்யும் நோக்கத்தில் மத்திய பிரதேச இசை மகாசங்கம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஆகஸ்ட் 25 ம் தேதியை இந்திய கிறிஸ்தவ மறைசாட்சிகள் தினமாகக் கடைபிடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

 








All the contents on this site are copyrighted ©.