2008-11-14 10:16:56

நவம்பர் 14 – தூலே நகர் புனித இலாரன்ஸ்


அயர்லாந்தில் 1128ல் பிறந்த இலாரன்ஸ் பஞ்சாயத்து தலைவரின் மகன். இலாரன்சுக்குப் பத்து வயதான போது பக்கத்துப் பகுதியில் வாழ்ந்த அரசர் ஒருவர் அவரது தந்தையைக் கடத்திச் சென்றுவிட்டார். எனவே அவர் தந்தையின்றி கஷ்டப்பட்ட தனது மகனை அந்த ஊர் ஆயரிடம் ஒப்படைக்க அரசரிடம் கேட்டுக் கொண்டார். இலாரன்சும் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அவர் தனது மகனை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். தனது பிள்ளைகளில் ஒருவர் கடவுளின் சேவைக்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார். உடனே இலாரன்ஸ் அதற்கு முன்வந்தார். குருவான இலாரன்ஸ் ஒரு பெரிய துறவு மடத்தின் தலைவரானார். உணவின்றியும் மற்ற பலவழிகளிலும் கஷ்டப்பட்ட மக்களுக்கு உதவினார். டப்ளின் பேராயராக நியமிக்கப்பட்ட பின்னர் இவரது புகழ் பரவியது. மக்களால் மிகவும் அன்பு செய்யப்பட்ட புனிதப் பேராயர் இலாரன்ஸ் 1180, நவம்பர் 14ல் இறந்தார். இதேநாளில் அலெக்ஸாந்திரிய நகர் ஆயர் செராபினோவின் விழாவும் சிறப்பிக்கப்படுகிறது.

சிந்தனைக்கு – உண்மையான ஊனம் உள்ளத்திலிருந்து வெளிப்படும்








All the contents on this site are copyrighted ©.