2008-11-14 17:47:50

நாடுகள் மனித உரிமைகளுக்கு மதிப்புத் தருவதில்லை என்கிறார் வத்திக்கான் அதிகாரி – 14, நவம்பர் , 08.


ஐக்கிய நாடுகள் சபை 60 ஆண்டுகளுக்கு முன்னதாக அறிவித்த மனித உரிமைகள் உலகின் பல பகுதிகளில் போற்றப்படுவதில்லை என்கின்றார் கர்தினால் மார்ட்டீனோ ரெனாட்டோ . கர்தினால் ரெனாட்டோ வத்திக்கானின் நீதி மற்றும் அமைதிக்கான மன்றத்தின் தலைவர் . ஐ. நாவின் மனித உரிமைகளை அமல்படுத்துவதாகக் கூறிய நாடுகளும் அமல்படுத்தியதாகத் தெரியவில்லை என அவர் கூறுகிறார் . இவ்வாரம் வியாழன் இதுபற்றிப் பேசிய கர்தினால் ரெனாட்டோ , ஐ.நா 1948 ஆம் ஆண்டு மனித உரிமைகள் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியது . இந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி வத்திக்கான் திருப்பீடம் இதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட உள்ளது . உலகச் சிறைச்சாலைகள் மனித உரிமைகள் மீறப்பட்ட நிலையால் நிரம்பி வழிகின்றன , என மேலும் கூறினார் ரெனாட்டோ . 2 பேர் மட்டுமே இருக்கக் கூடிய இடத்தில் 6 பேர் இருக்கவேண்டிய கொடுமை இத்தாலியச் சிறைகளில் இருப்பதாகக் கூறினார் . டிசம்பர் 10 ஆம் நாள் மனித உரிமைகள் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் வத்திக்கான் செயலர் தார்சீசியோ பெர்த்தோனே , உலகத் தொழிலாளர் அமைப்பின் தலைவர் ஜூவான் சோமாவியா , ஐ. நாவின் விவசாயம் , உணவு அமைப்பின் தலைவர் ஜாக்ஸ் டியூப் ஆகியோர் கலந்தது கொள்ள உள்ளார்கள் . வத்திக்கான் அலுவலக திருப்பீடத்தின் முக்கிய உறுப்பினர்களும் , வத்திக்கானுக்கான பிற நாட்டுத்தூதர்களும் கலந்து கொள்வார்கள் . அன்று மாலையில் நடக்க உள்ள இசைக் கச்சேரியில் திருத்தந்தை கலந்து கொள்வார்







All the contents on this site are copyrighted ©.