2008-11-13 18:28:08

வத்திக்கான் திருப்பீடத்துக்கான சான் மாரினோ குடியரசின் அரசுத் தூதரை திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் வரவேற்றுப் பேசினார் . 13 நவம்பர் , 08 .


இந்த வியாழன் காலை சான் மாரினோ குடியரசின் வத்திக்கானுக்கான புதிய தூதர் திருமதி டாக்டர் சாந்தே கண்டூச்சி அவரது சான்றிதழ்களை திருத்தந்தையிடம் சமர்ப்பித்தார் . இவர் மருததுவத் துறையில் சிறப்புப் பட்டங்கள் பெற்றவர் .



அவரை வரவேற்றுப் பேசிய திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் , அவரது தூதரகத்துக்கான சான்றிதழ்களைப் பெறுவதில் மகிழ்ச்சி் எனக் கூறினார் . சான் மாரினோ குடியரசும் மக்களும் எப்பொழுதுமே திருப்பீடத்துக்கு விருப்பமானவை என்றார் திருத்தந்தை . இக் குடியரசு 1926 லிருந்து திருப்பீடத்தோடு நல்ல உறவு கொண்டுள்ளதாகக் கூறினார் திருத்தந்தை . எனவே உறவுகளைப் புதுப்பிப்பதில் மகிழ்ச்சி என்றும் கூறினார் . சிறிய, தனி நாடு என்றாலும் அதன் வரலாறும் ,மரபும் , அருமையான கலாச்சாரமும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவை என மேலும் கூறினார் திருத்தந்தை . எல்லா நாடுகளும் அகில உலகையும் வளரச் செய்ய முன் வரவேண்டும் . இத்தாலிய தீபகற்பத்துக்குள் இருக்கும் சான் மாரினோ அதனுடைய செழிப்பு மிக்க தனித்துவத்தையும் , பழங்காலத்துச் கலாச்சாரத்தையும் ,கத்தோலிக்கக் கிறிஸ்தவப் பின்னணியோடு கூடிய வரலாற்றையும் உடையது. அந்நாடு இன்றைய நாகரீகத்துக்கும் பண்பாட்டுக்கும் தனது செல்வம் மிக்க மரபுகளைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என திருத்தந்தை கேட்டுக்கொண்டார் . அந்நாட்டுத் தலைவருக்கும் குடிமக்களுக்கும் தமது ஆசியை வழங்கி, திருமதி சாந்தே கண்டூச்சியின் தூதரகப்பணி சிறக்க வாழ்த்தி தமது ஆசியை வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.