2008-11-13 18:34:27

காங்கோ நாட்டில் நிலைமை மோசமாக உள்ளதாகக் கூறுகிறது காரித்தாஸ். 13,நவம்பர் ,08.


காங்கோவின் கோமாப் பகுதியில் காரித்தாஸ் தொண்டு நிறுவனம் அங்கு உள்நாட்டுப்போர் மூண்டுள்ளதால் அவதியுறும் மக்களுக்குத் தொண்டு புரிந்து வருகிறது . காங்கோ் குடியரசின் கிழக்குப் பகுதியில் அமைதியின்மை நிலவுகிறது. அங்குள்ள முகுங்காவில் உள்ள முகாமிலேயே, ஒரே நாளில் 39 கற்பழிப்புக் குற்றங்கள் நடந்துள்ளதாகக் காரித்தாஸ் கூறியுள்ளது . மகளிர் சமையலுக்கு விறகு பொறுக்கச் செல்வதற்கு அஞ்ச வேண்டிய நிலைமையுள்ளதாகக் கூறப்படுகிறது . 64,000 மக்களுக்கு காரித்தாஸ் உணவு வழங்கி வருகிறது .வடக்குக் கிவு பகுதியில் மக்கள் பசி, நோய் , கற்பழிப்பு , மற்றும் சாவுக்கு ஆளாக வேண்டிய நிலைமையுள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கை கடந்த வாரம் முறிந்துவிட்டது . இப்பொழுது காங்கோ இராணுவத்துருப்புக்களும் , ஆட்சி எதிர்ப்பாளர்களும் போரிட்டு வருகிறார்கள் . புலம் பெயர்ந்துள்ள மக்களுக்கு உணவும் , உறையுளும் , தண்ணீரும், பாதுகாப்பான இடமும் இல்லாது அவதியுறுவதாகத் தெரிகிறது .








All the contents on this site are copyrighted ©.