2008-11-12 15:43:25

மடுமாதா திருத்தலத்திற்கு கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு முன் திருப்பயணிகள் செல்வதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - காரித்தாஸ் அமைப்பு கோரிக்கை


நவம்.12,2008. வடஇலங்கையின் மடுமாதா திருத்தலத்திற்கு கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு முன் திருப்பயணிகள் செல்வதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்நாட்டின் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பினர் இலங்கை அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளனர்.

அண்மையில் இம்மடுமாதா திருத்தலத்திற்குச் சென்று திரும்பிய இலங்கை காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர் குரு டாமியன் பெர்னாண்டோ உரைக்கையில் மடுமாதா திருத்தலப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது மற்றும் மலேரியா நோய் பரவி வருவது குறித்து அரசுக்கு தெரிவிக்க விரும்புவதாகக் கூறினார்.

400 ஆண்டுகள் பழமையுடைய இத்திருத்தல் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடி விழாக் கொம்டாடுவது வழக்கமாயிருக்க, இவ்வாண்டு 540 திருப்பயணிகளையே இத்திருத்தலத்திற்கு அனுமதித்தது இலங்கை இராணுவம் என்பது குறிப்பிடத்தக்கது







All the contents on this site are copyrighted ©.