2008-11-12 15:49:17

காங்கோவில் வரும் சில மாதங்களில் 16 இலட்சம் பேர் வரை பசியால் உயிரிழக்கும் அபாயம்


நவம்.12,2008.காங்கோ ஜனநாயகக் குடியரசில் வரும் சில மாதங்களில் 16 இலட்சம் பேர் வரை பசியால் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக அங்கு பணிபுரியும் கத்தோலிக்க மறைபோதகர் ஒருவர் கவலையை வெளியிட்டுள்ளார்.

வடகிவு பகுதியில் விளைநிலங்கள் மக்களால் கைவிடப்பட்டுள்ளதாகவும் தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் குறைந்தது 6 மாதங்களுக்கு இம்மக்கள் சர்வதேச உணவு உதவிகளையே நம்பி வாழ வேண்டிய சூழல் இருப்பதாக அவர் கூறினார்.

லவரான் நிகுந்தாவின் தலைமையின் கீழ் உள்ள புரட்சிக் குழுவின் நடவடிக்கைகளால் அகதிகள் முகாம்களிலிருந்தும் வெளியேறியுள்ள மக்களை இராணுவத்தினரும் கொடுமைப்படுத்துவதைக் காணமுடிகின்றது என்று இம்மறைப்பணியாளர் மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.