2008-11-12 15:46:23

ஈராக்கில் சிறுபான்மை சமூகத்தவரின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என அமெரிக்க ஐக்கிய நாட்டின் புதிய அதிபர் வலியுறுத்துவார் - பாக்தாத் பேராயர்


நவம்.12,2008. ஈராக்கில் சிறுபான்மை சமூகத்தவரின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என அமெரிக்க ஐக்கிய நாட்டின் புதிய அதிபர் வலியுறுத்துவார் என்ற தனது நம்பிக்கையை பாக்தாத் பேராயர் ஜான் ஸ்லைமான் வெளியிட்டுள்ளார்.

கிறிஸ்தவர்களின் தேவைகள் மட்டுமல்ல, அனைத்து சிறுபான்மையினரின் தேவைகளும் மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஈராக் அரசை வலியுறுத்த வேண்டியது அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் புதிய அதிபரின் கடமையாகிறது என்றார் பேராயர்.

வரும் ஜனவரியில் இடம்பெறவுள்ள மாகாணத் தேர்தலின் 400க்கும் மேற்பட்ட இடங்களுக்கான போட்டியில் மூன்று இடங்களே கிறிஸ்தவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது குறித்தும் கருத்து வெளியிட்ட பேராயர் ஸ்லைமான், ஈராக்கில் சட்டத்தின் ஆட்சிக்கும் சரிநிகர் தன்மைக்கும் மனித உரிமை மதித்தலுக்கும் அரசியலமைப்பில் முதலிடம் கொடுக்கப்பட வேண்டுமெனவும் விண்ணப்பத்தார்.








All the contents on this site are copyrighted ©.