2008-11-12 17:21:11

திருத்தந்தையின் புதன் மறைபோதகம் – 12, நவம்பர் ,08.


வந்திருந்த அனைவருக்கும் வாழ்த்துக்கூறி , வரவேற்று ,

திருத்தூதர் பவுல் பற்றிய மறைபோதகத்தின் தொடர்ச்சியாக பவுல் அடிகளார் இயேசுக் கிறிஸ்துவின் இறப்பு உயிர்ப்புப் பற்றிக் கூறுவதற்கு அடுத்து , கிறிஸ்துவின் இரண்டாம் வருகைபற்றிக் கூறுவதுபற்றி இன்று பார்ப்போம் என்றார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . ஆண்டவர் இயேசுக்கிறிஸ்துவின் வருகை உலக முடிவில் , இறந்தோர் உயிர்பெற்று எழுதலோடும் , இறை அரசு முழுமை பெறுவதோடும் நிறைவேறும் என்கின்றார் . அதுபோது கிறிஸ்துவை நம்பி, அவரில் விசுவாசம் கொண்டவர்கள் அனைவரும், முடிவில்லாத மகிமையில் அவரோடு பங்கு பெறுவர் எனத் திருத்தூதர் பவுல் கூறுகிறார் . கிறிஸ்து இயேசுவின் வெற்றிகரமான ஆட்சி தொடங்கிவிட்டது . தூய ஆவியானவரை நமது மீட்பின் முதல் கனியாகப் பெற்றுக்கொண்ட நாம், இறைவனின் திட்டம் நம்மில் நிறைவேறப் பொறுமையாகக் காத்திருக்கிறோம் .சோதனைகளாலும் , துன்பங்களாலும் நிறைந்துள்ள நம் வாழ்க்கை வான்வீட்டுச் சிந்தையாலும் , மகிமைக்கு உயிர்த்தெழுதலின் எதிர்பார்ப்பாலும் தூண்டப்பட வேண்டும் . திருத்தூதர் பவுலின் மறுவாழ்வு பற்றிய மிக ஆழமான கொள்கை ,- மறுவாழ்வு இப்பொழுதே தொடங்கிவிட்டது ,ஆனால் இன்னும் நிறைவுறவில்லை என்பது - நம்பிக்கையால் நாம் மீட்கப்பட்டுள்ளோம் என்று அவர் கூறுவதில் காணப்படுகிறது . ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகையை மகிழ்ச்சிகரமாக எதிர்நோக்குதலையும் , கடவுள் தந்தை மீட்பின் திட்டத்தை நிறைவுசெய்வது பற்றியும், பழைய கிறிஸ்தவ செபமொன்றிலிருந்து எடுத்து தனது கொரிந்து மக்களுக்கு எழுதிய மடலை - மாராநா தா - வாரும் ஆண்டவர் இயேசுவே -என்று முடிப்பதில் காண்கிறோம் .



இன்றைய மறைபோதகத்துக்கு வந்திருந்த அனைவருக்கும் கடவுளின் அமைதியையும் மகிழ்ச்சியையும் வேண்டி , தமது அப்போஸ்தலிக்க ஆசியை வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.