2008-11-11 15:15:09

ஆப்ரிக்காவில் இரண்டு இத்தாலிய அருட்சகோதரிகள் ஆயுதம் தாங்கிய மனிதர்களால் கடத்தப்பட்டுள்ளார்கள்


நவம்.11,2008. ஆப்ரிக்க நாடான கென்யாவில் சொமாலிய அகதிகள் மத்தியில் பல ஆண்டுகளாக பணியாற்றிவரும் இரண்டு இத்தாலிய அருட்சகோதரிகளை ஆயுதம் தாங்கிய மனிதர்கள் கடத்தியுள்ளார்கள் என்று திருப்பீட சார்பு தினத்தாள் ஒசர்வாத்தோரே ரொமானோ அறிவித்தது.

அருட்திரு சார்லஸ் தெ ப்போக்கால்டின் தியானயோக மறைபோதக சபையைச் சார்ந்த 67 வயதாகும் அருட்சகோதரி கத்தரீனா, 61 வயதாகும் அருட்சகோதரி மரிய தெரேசா ஆகியோர் கடத்தப்பட்டுள்ளனர் மற்றும் அவர்களின் முன்று வாகனங்களும் திருடப்பட்டுள்ளன என்று கென்ய செஞ்சிலுவை சங்கம் அறிவித்ததாக அத்தினத்தாள் மேலும் கூறியது.

1950 களில் இத்தாலியில் தொடங்கப்பட்ட இச்சபையின் அருட்சகோதரிகள் சிறு சிறு குழுக்களாக சேரிகளிலும், அகதிகள் முகாம்களிலும் இன்னும் பிற கடும் ஏழ்மையான பகுதிகளிலும் பணியாற்றுகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.