2008-11-07 17:24:37

வத்திக்கான் திருப்பீட நல வாழ்வுக் கருத்தரங்கு உறுப்பினர்களுக்குத் திருத்தந்தையின் உரை . 07 நவ. 08 .


திருப்பீடம் ஏற்பாடு செய்த நல வாழ்வுக்காக உடல் உறுப்புக்களைத் தானமளிப்பது பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டோரை இந்த வெள்ளிக்கிழமை நண்பகலில் திருத்தந்தை வரவேற்றுப் பேசினார் . தொடக்கத்தில் வத்திக்கான் திருப்பீடத்தின் வாழ்வுக்கான மன்றத்தின் தலைவர் பேராயர் ரீனோ பிசிச்செல்லா கருத்தரங்கில் பங்கேற்ற 500 பேரின் சார்பாகத் திருத்தந்தைக்கு வாழ்த்துரை வழங்கினார் . அவருக்கு நன்றி கூறிய திருத்தந்தை , உடல் உறுப்புக்களைத் தானமளிப்பது பிறரன்புக்குச் சான்றாகும் . ஆண்டவர் இயேசு அறிவுறுத்தியது போல தம் வாழ்வைப் பிறருக்காகக் கொடுக்கும் ஒருவர் அதை மீண்டும் பெற்றுக் கொள்வார் என்பது தமது உடலின் ஒரு பகுதியைப் பிறருக்குத் தானமாகத் தரும் மகத்தான கொடையில், அயலார்க்காக அன்பு செய்யும் பொறுப்புள்ள தன்மையைக் காண்கிறோம் என்றார் திருத்தந்தை . உடல் உறுப்பைத் தானமாகக் கொடுப்பதும் , அதற்காகத் தேவைப்படும் செலவுகளைத் தானமாக உறவினர்கள் ஏற்பதும் அன்பின் வெளிப்பாடுகள் . இந்த வாழ்வியல் தானத்தைப் பெறுகின்றவரும் நன்றிக் கடன்படுகிறார் என்றார் திருத்தந்தை . இந்தப் உடல்தானப் பரிமாற்றத்தில் உள்ள சந்தேகங்களையும் தவறான கருத்துக்களையும் நீக்கி , அச்சத்தைப் போக்கி , வாழ்வெனும் கொடையினை ஆழமாக உணர்வோம் எனக் கூறி , கடவுள் ஆசியை வேண்டி கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் தமது ஆசியை வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.