2008-11-05 18:57:13

குடியாட்சியின் நம்பிக்கை ஒபாமா, வாழ்வைப் பாதுகாக்கட்டும். 051108.


மும்பையின் பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிராஸியாஸ் ஒபாமாவின் தேர்வு பற்றிக் கூறும்போது , அவரது வெற்றி இந்தியாவுக்கும் வெற்றியே என்றார் . பல இனங்களும் , பல சமயங்களும் உள்ள அமெரிக்கா அவரைத் தேர்வு செய்தது மகத்தானது எனக் கர்தினால் கிராஸியாஸ் கூறினார் . இந்திய ஆயர்கள் குழுவின் தலைவராகிய கர்தினால் கிராஸியாஸ் ஒபாமாவின் வெற்றி குறித்து மகிழ்ச்சியும் ,நம்பிக்கையும் வெளியிட்டார் . ஒபாமா வாழ்வினைக் காக்க முன்வர வேண்டும் எனச் செபிப்பதாகக் கூறினார் . அவரது வெற்றி மார்ட்டின் லூத்தர்கிங்கின் கனவு 45 ஆண்டுகளுக்குப்பின் நனவாகியுள்ளதைக் காட்டுகிறது . குறுகிய காலக்கட்டத்தில் அமெரிக்கா பெரும் வளர்ச்சி கண்டுள்ளதாகத் தெரிவித்தார் கர்தினால் கிராஸியாஸ் . கருச்சிதைவுக்கு பெரும் ஆதரவு தரும் ஒபாமா திருச்சபையின் வாழ்வியல் கொள்கைகளுக்கு எதிராக இருப்பது ஒரு குறை என கர்தினால் கிராஸியாஸ் சுட்டிக்காட்டியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.