2008-11-05 18:14:21

அமெரிக்க நாட்டின் ஆயர்கள் குழுவின் தலைவர் ஒபாமாவுக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறார் . 05 நவ. 08.


அமெரிக்க ஆயர்கள் குழுவின் தலைவர் , சிகாகோவின் கர்தினால் பிரான்சிஸ் ஜார்ஜ் , வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த , வெள்ளை மாளிகையை ஆப்பிரிக்க – அமெரிக்க இனத்தைச் சேர்ந்த பாரக் ஒபாமா வென்றுள்ளதற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் . அமெரிக்கக் கத்தோலிக்க ஆயர்கள் சார்பாக அவர் அனுப்பிய மடலில் அமெரிக்க நாட்டு மக்கள் முக்கியமான பொறுப்பை உம்மிடம் ஒப்படைத்துள்ளார்கள் . கத்தோலிக்க ஆயர்கள் என்ற முறையில் உமக்கு கடவுளுடைய அருளை வேண்டி, வரக்கூடிய சவால்களைச் சந்திப்பதற்குத் தேவையான ஊக்கத்தையும் , ஞானத்தையும் ஆண்டவர் உமக்குத் தரவேண்டும் எனச் செபிக்கின்றோம் என வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார் . பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கும் நாட்டை நீவிர் உமது பணியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி எங்கு பாதுகாப்பு அதிகம் தேவையுறுகிறதோ அதைக் காப்பதற்கும் , நம் நாட்டிலும் , உலகிலும் பிரிவினைகளை நீக்கி ஒற்றுமைக்கு வழி காணவும் செபிப்பதாகவும் தெரிவித்துள்ளார் . நாட்டு மக்களுக்குச் சேவை புரிய தயாராகும் இந்நேரத்தில் , வாழ்வையும் , மனித மாண்பையும் உம்மோடு இணைந்து காப்பதற்கு கரம் சேர்ப்பதாகக் கூறி , உம்மையும் , துணைத் தலைவர் ஜோசப் பைடனையும் கடவுள் ஆசி வழங்கி வழி நடத்துவாராக என வாழ்துச் செய்தி அனுப்பியுள்ளார் கர்தினால் பிரான்சிஸ் இ . ஜார்ஜ் .








All the contents on this site are copyrighted ©.