2008-11-04 20:48:04

திருப்பலி பீடத்தை நீக்க வியட்நாம் அரசு உத்தரவு .04-11-08 .


துவா தீன் குவே மாநிலத்தில் அரசு முன்னர் கொடுத்த இடத்தில் கட்டியிருந்த பீடத்தில் பங்குத் தந்தை ஒருவர் கத்தோலிக்க வழிபாடு நடத்த வியட்நாம் அரசு அனுமதி மறுத்துள்ளது. அந்த இடம் அரசுக்குச் சொந்தமான வனச் சரகத்தைச் சேர்ந்தது எனக் கூறி வழிபாட்டை நிறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது . அங்கு பீடம் அமைத்து சிலுவையும் நிர்மாணிக்கப் பட்டிருந்தது . கடந்த ஒரு மாத காலமாக அங்கு வழிபாட்டுக்கு வருபவர்களை அரசு கண்காணித்து வருவதாக யுகன் செய்தி நிறுவனம் கூறியுள்ளது .








All the contents on this site are copyrighted ©.