2008-11-02 19:18:46

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆட்சியை மாற்றுவது பற்றி ஆயர்கள் கருத்து வேறுபாடு. 021108 .


பிலிப்பைன்ஸ் நாட்டின் குடியாட்சித் தலைவர் குளோரியா அரோயோ ஊழலை அகற்ற தவறிவிட்டதாகக் கூறி அரசுத்தலைவரை மாற்ற வேண்டும் என பிலிப்பைன்ஸ் நாட்டின் ஆயர்குழுவின் தலைவர் பேராயர் ஏஞ்சல் லக்டாமேயோ அழைப்பு விடுத்துள்ளார் . லிங்காயன் பேராயர் ஓகார் குரூசும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் . ஆனால் மக்கள் இதைக் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. முன்னால் கர்தினால் ஜெய்ம் சின் அழைப்பு விடுத்தபோதெல்லாம் மக்கள் செவிமடுத்ததாகத் தெரிகிறது . ஆயர்கள் குழுவின் உதவித் தலைவர் டாண்டாக் மறை மாவட்ட ஆயர் நேரோ ஒட்சிமார் பேராயர் ஏஞ்சல் சொல்வது அவரது சொந்தக் கருத்து என்றும் அதைப் பின்பற்றத் தேவையில்லை எனவும் கூறியுள்ளதால் ஆயர்களுக்குள்ளேயே இதுபற்றிக் கருத்து வேற்பாடு இருப்பது தெளிவாகத் தெரிகிறது .








All the contents on this site are copyrighted ©.