2008-11-01 20:52:44

ஒரிசா ஆயர்களின் சுற்றுமடல் . 01 நவ. 08 .


ஒரிசாவில் வன்முறைகளால் துன்புறும் மக்கள் அனைவருடனும் ஒருமைப்பாட்டை அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் அம்மாநில கத்தோலிக்க ஆயர்கள் .



கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளால் பாதிக்கப்படுள்ள மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை வெளியிடும் ஆயர்களின் அறிக்கை பாதிக்கப்பட்டவர்களுக்கான மறு வாழ்வு , இழுப்பீடுளுக்கான நிவாரணம் போன்றவைகளுக்காக உழைக்க உள்ளதாகவும் உறுதி கூறியுள்ளார்கள் . அனைத்துவிதமான வன்முறைகளுக்கும் கண்டனத்தைத் தெரிவிப்பதோடு வன்முறைத் தாக்குதல்களில் இருந்து அரசின் பாதுகாப்பையும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப்பணிகளையும் எதிர்பார்ப்பதாகவும் ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளார்கள். கல்வி , நல ஆதரவு உறைவிட வசதி வேலை வாய்ப்புக்கள் போன்றவைகளை ஏழைகளுக்கு கிடைக்க வழிவகுத்து அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாலேயே திருச்சபை அங்கத்தினர்களுக்கு எதிரான இந்தத் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனர் ஒரிசா மாநில கத்தோலிக்க ஆயர்கள் .

 








All the contents on this site are copyrighted ©.