2008-10-31 10:30:20

சுதந்திரம் என்பதன் சரியான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் திருத்தந்தை .31 அக்டோபர் ,08 .


இவ்வாரம் வியாழன் அன்று வத்திக்கான் திருப்பீடத்துக்கான கனடா நாட்டுப் புதிய தூதர் ஆன் லீகி என்பவர் திருத்தந்தையிடம் அவரது சான்று பத்திரங்களைக் கொடுத்துச் சந்தித்தார் . அவரை வரவேற்றுப் பேசிய திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் , வாழ்க்கைக்கான நல்ல பண்புகளை புத்துயிர் பெறச்செய்து , மனித மாண்பைக் கனடா போற்ற வேண்டும் எனக் கூறினார் .கனடா நாட்டின் சமூகத்தில் கத்தோலிக்கச் சமயம் முக்கிய மூலைக்கல்லாக இருப்பதாகக் கூறினார் திருத்தந்தை . கவலை தரக்கூடிய சூழ்நிலை கனடாவில் உருவாகி உள்ளதாகத் திருத்தந்தை கூறினார். மனிதப் பண்பைப் பின்னோக்கிக் கொண்டு போவதாகக் கூறினார் திருத்தந்தை . பிறரை மதியாது தன் விருப்பப்படி வாழ நினைப்பதால் அங்கு திருமண வாழ்வையும் , இறப்பையும் தத்தமது விருப்பப்படி அமைத்துக்கொள்வதாகத் திருத்தந்தை மேலும் கூறினார் . மிதமிஞ்சிய சுதந்திரக் கொள்கைகளுக்கு அந்நாட்டில் இடம் அளிப்பதாகக் கூறிய திருத்தந்தை ,கடவுளின் கொடையாகிய மனிதச் சுதந்திரத்தைச் சரியான முறையில் உலக வழக்குப்படி , தனி மனிதனையும் , சமூகத்தையும் மாண்புள்ளதாக்கும் முறையில் கடைப்பிடிக்க வேண்டும் எனத் திருத்தந்தை செய்தி வழங்கினார் .பொது நல வாழ்வுக்குக் கனடா துணை நிற்கும் என நம்புவதாகக் கூறிய திருத்தந்தை, கனடா நாடு கண்ணி வெடிகளை 1997 ஒப்பந்தப்படி அழிப்பதற்குக் குரல் கொடுத்ததற்கு நன்றி கூறினார் .








All the contents on this site are copyrighted ©.