2008-10-31 11:24:12







கத்தோலிக்க இஸ்லாமிய சமயக் கலந்துரையாடல் கருத்தரங்கில் திருத்தந்தை கருத்து வழங்கவுள்ளார் . 31 அக். 08.

 
/a> /a> 



கத்தோலிக்க மற்றும் இஸ்லாமியக் குழுமத்தின் சார்பாக நவம்பர் 4 தேதியிலிருந்து 6 வரை உரோமையில் சமயக் கலந்துரையாடல் நடக்கவுள்ளது. கருத்தரங்கின் மையக்கருத்தாக கடவுளுக்கு அன்பு , அயலாருக்கு அன்பு என்பது இருக்கும் . திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அகில உலகச் சான்றோர்களுக்கு உரை வழங்குவார் என கத்தோலிக்கச் செய்தி ஊடகம் கூறுகிறது. திருத்தந்தை ஜெர்மனியின் ரீகன்ஸ்பர்கில் பேசிய உரைக்கு இஸ்லாமியர் எழுப்பிய எதிர்ப்புக் குரலுக்குப் பிறகு இதுவே கத்தோலிக்க மற்றும் இஸ்லாமியர்களின் முதல் கருத்தமர்வாகும் .நவம்பர் 4 , 5 தேதிகளில் உறுப்பினர்களுக்குள் கலந்துரையாடல் நடைபெறும் . நவம்பர் 6 ஆம் தேதி பொது அமர்வு நடக்கவுள்ளது . கருத்தரங்கில் இரு பாலரும் கலந்து கொள்ளவார்கள் . இறையன்பு , பிறரன்பு பற்றி இரு சமயங்களிலும் காணப்படும் ஆதாரங்கள் பற்றிக் கருத்துப் பரிமாற உள்ளனர் .








All the contents on this site are copyrighted ©.