2008-10-30 20:05:54

திருப்பீடப் பல்கலைக்கழகங்களின் இக்கல்வி ஆண்டு தொடக்க நாளில் திருத்தந்தையின் வாழ்த்து .30 அக்டோபர், 08.


இவ்வாரம் வியாழன் மாலையில் வத்திக்கானின் தூய பேதுரு பசிலிக்காவில் இக்கல்வியாண்டுக்கான தொடக்க நாள் திருப்பலியின் முடிவில் வழக்கப்படி பல்கலை உறுப்பினர்களைச் சந்திப்பது மகிழ்ச்சி தருவதாகத் திருத்தந்தை கூறினார் . திருப்பலியை திருப்பீடத்தின் கத்தோலிக்கக் கல்விக்கான மன்றத்தின் தலைவர் செனன் குரோசோலவ்ஸ்கி முன் நின்று நடத்தினார் . மற்று வேறு கர்தினால்களும் , அதிபர்களும் ,பேராசிரியர்களும் , தலைவர்களும் , குரு மாணவர் இல்லத் தலைவர்களும் , பல நாடுகளிலிருந்தும் உரோமையில் பயில வந்த மாணவர்களும் கூடியிருந்தனர் . அனைவருக்கும் திருத்தந்தை வாழ்த்துக்கூறினார் . திருத்தூதர் பவுலின் இரண்டாயிரமாவது பிறப்பு விழாவைச் சிறப்பிக்கும் இவ்வாண்டில் அவர் கூறியுள்ள ஒரு கருத்துப் பற்றிப் பார்ப்போம் என்றார் திருத்தந்தை .கொரிந்தியருக்கு எழுதிய மடலில் கிறிஸ்தவர்களிடையே இருக்கும் பிளவு பற்றிப் பேசுகிறார் .சரியான வளர்ச்சி இல்லாத நிலை பற்றி அவர் சுட்டிக்காட்டுகிறார் . ஆன்மீகத்தில் வளராத நிலைபற்றிக் கூறுகிறார் . திருத்தூதர் பவுல் அவரைக் கிறிஸ்து நற்செய்தியை அறிவிக்கவே அனுப்பினார் என்றும் , மனித ஞானத்தின் அடிப்படையிலான சொற்களில் இந்த நற்செய்தியை அறிவித்தலாகாது என்றும் அவ்வாறு அறிவித்தால் கிறிஸ்துவின் சிலுவை பொருளற்றுப் போய்விடும் என்றும் கூறுகிறார் , எனத் திருத்தந்தை மேற்கோள் காட்டினார். திருத்தூதர் பவுல் இதில் கிறிஸ்துவின் சிலுவையிலிருந்து நாம் பெறும் இறை ஞானம் பற்றியும் , உலகம் தரும் அறிவு பற்றியும் தெளிவாக்கினார். நாம் கிறிஸ்துவின் ஞானத்தை நமதாக்க வேண்டும் எனத் திருத்தந்தை அறிவுரை வழங்கினார் .








All the contents on this site are copyrighted ©.