2008-10-29 15:23:15

மனிதன் என்பவன் இயற்கை வளங்களின் எதிரியாக நோக்கப்படாமல் அதனுடன் ஒத்திணங்கிச் செல்லும் நண்பனாக நோக்கப்படுதல் அவசியம்


அக்.29,2008. மனிதன் என்பவன் இயற்கை வளங்களின் எதிரியாக நோக்கப்படாமல் அதனுடன் ஒத்திணங்கிச் செல்லும் நண்பனாக நோக்கப்படுதல் அவசியம் என ஐ.நா. அவைக் கூட்டத்தில் திருப்பீடப் பிரதிநிதி பேராயர் செலஸ்தினோ மிலியோரே உரையாற்றினார்.

ஐ.நா.பொது அவையின் 63வது தொடரில் உரையாற்றிய ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் மிலியோரே, மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே எவ்வித முரண்பாடும் இல்லை, மாறாக ஒன்றையொன்று பாதுகாத்து ஒருவருக்கொருவர் உதவுவதாக உள்ளன என்றார்.

இயற்கையை பாதுகாக்க வேண்டிய கடமை மனிதனுக்கு உள்ளது என்ற பேராயர் அதன் விளைவாக மனித முன்னேற்றமே பயன்பெறும் எனவும் ஐ.நா. அவைக் கூட்டத்தில் கூறினார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது, உணவுப் பாதுகாப்பிற்கும் சர்வதேச அளவிலான ஒருமைப்பாட்டிற்கும் உதவுவதாயும் பொருளாதாரம் அமைதி, நீதி, எரிசக்தி போன்றவைகளுடன் இணைந்ததாயும் உள்ளது என மேலும் அவர் உரைத்தார்







All the contents on this site are copyrighted ©.