2008-10-27 15:26:37

பிலிப்பைன்ஸ் நாட்டுப் புதிய தூதுவர் நம்பிக்கைச் சான்றிதழ்களைத் திருத்தந்தையிடம் சமர்ப்பித்தார்


அக்.27,2008. பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களின் செபத்திற்கான தாகம், உயிரோட்டமுள்ள பக்தி முயற்சிகள், பிறருக்கு உதவுவதர்கான ஆவல் ஆகியவை, கடவுளின் அக்கறை மீதான அம் மக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடுகளாக உள்ளன என்று திருத்தந்தை கூறினார்.

திருப்பீடத்திற்கான பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய தூதுவர் கிறிஸ்டினா காஸ்தானெர் என்ரிலிடமிருந்து இன்று நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய திருத்தந்தை, திருப்பீடமானது தன் அரசியல் செயல்பாடுகள் மூலமாக பேச்சுவார்த்தைகளின்வழி சர்வதேச மதிப்பீடுகளை ஊக்குவிக்க உழைத்து வருகின்றது என்றார்.

கருவில் வளரும் குழந்தைகள், நோயாளிகள், எளியோர் மற்றும் முதியோரின் நலனுக்காக பிலிப்பைன்ஸ் மக்கள் எடுத்து வரும் முயற்சிகளைப் பாராட்டுவதாக அவர் கூறினார்.

வெளிநாட்டில் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் மக்கள் மீதான அக்கறை, ஏழைகளுக்கான நிலச்சீர்திருத்தம், விவசாயப்புரட்சி, சர்வதேச அமைதி, மனிதகுல ஒருமைப்பாடு, மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகள் போன்றவைகளின் மீது பிலிப்பைன்ஸ் அரசின் ஈடுபாட்டையும் திருத்தந்தை பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய தூதுவரிடம் எடுத்துச் சொன்னார்.

 








All the contents on this site are copyrighted ©.