2008-10-27 18:28:37

கர்தினால் அந்திரே விங்த்ருவா ரஷ்யாவில் 5 நாள் பயணம் .27அக்.08.


ரஷ்ய ஆர்த்தோடாக்ஸ் பிதாப்பிதா 2 ஆம் அலெக்சியின் அழைப்பின் பேரில் இஞ்ஞாயிறு முதல், வரும் வியாழன்வரை 5 நாள் பயணத்தை ரஷ்யாவில் மேற்கொண்டுள்ளார் பிரான்ஸ் நாட்டின் கர்தினால் அந்திரே விங்த்ருவா . பாரீஸ் பேராயரும் பிரான்ஸ் நாட்டின் பேரவைத் தலைவருமான கர்தினால் விங்த்ருவாவின் பயணம் சோவியத் ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட மறைசாட்சிகளைப் பெருமைப்படுத்தவும், சோவியத் ஆட்சிக்குப் பின்னர் தற்காலத்தில் ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் பங்களிப்பை அங்கீகரிப்பதாகவும் இருக்கும் என்கிறது பாரீஸ் பெரு மறைமாவட்டம் வெளியிட்ட செய்தி. சோவியத் நாட்டில் 1917 ஆம் ஆண்டிற்குப்பிறகு எண்ணற்ற குருக்களும் , இறைமக்களும் பணி முகாம்களில் அடைக்கப்பட்டு போதிய உணவின்றி சித்திரவதைகளை அனுபவித்தது பற்றி குறிப்பிட்ட கர்தினால், இதற்குச் சாட்சியான சோலோவிக்கித் தீவு துறவு மடத்துக்குத் தாம் செல்லவிருப்பது அம்மறைசாட்சிகளை பெருமைப்படுத்துவதற்கே எனவும் கூறினார் . ரஷ்ய கத்தோலிக்கர்களையும் சந்திக்க உள்ள கர்தினால் விங்த்ருவா, திருப்பீடத்தூதர் பேராயர் அந்தோனியோ மெனினி, மாஸ்கோப் பேராயர் பவலோ பெட்சி ஆகியோரையும் சந்தித்து உரையாற்றுவார்.








All the contents on this site are copyrighted ©.