2008-10-27 20:31:33

ஐரோப்பிய முஸ்லிம் கிறிஸ்தவக் கருத்தரங்கு மதச்சுதந்திரத்தை வலியுறுத்துகிறது.

27 அக். 08.


மதச்சுதந்திரம் அடிப்படை உரிமை என்று கிறித்தவ இஸ்லாமியக் கருத்தரங்கின் 45 உறுப்பினர்கள் சென்ற வியாழன்று இரு சமயத்தவரும் இணைந்து வெளியிட்ட ஒப்பந்தத்தில் தெரிவித்துள்ளனர் . கிறித்தவர்களும் இஸ்லாமியருமாகிய நாங்கள் மனச்சாட்சிப்படி நடப்பதற்குள்ள உரிமையையும் , மதம் மாறுவதற்குள்ள உரிமையையும் , மதப் பற்றில்லாமல் வாழ்வதற்குள்ள உரிமையையும் , பொதுவிடத்தில் தங்கள் கொள்கைகளை எவரும் இழிவுபடுத்தித் தடுக்காதும், அச்சுறுத்தாதும் வெளியிடவும் உள்ள உரிமைகளையும் வலியுறுத்துகிறோம் . மேலும் இறைப் பற்றுக் கொண்ட ஐரோப்பிய சமுதாயத்தின் குடிமக்கள் என்ற முறையில் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியருமாகிய நாங்கள் ஐரோப்பிய சமுதாயத்தில் செயல்திறமுடைய உறுப்பினர்கள் என்பதையும் உறுதிசெய்கிறோம் என ஒப்பந்தத்தில் தெரிவித்துள்ளனர். இந்தக் கருத்தரங்கை ஐரோப்பயத் திருச்சபையும் ஐரோப்பிய ஆயர்கள் குழுவின் மன்றமும் நடத்தின .








All the contents on this site are copyrighted ©.