2008-10-25 20:50:13

ஒரிசாவில் சென்ற ஆகஸ்ட் மாதம் கற்பழிக்கப்பட்ட அருள்சகோதரியின் வாக்குமூலம் .25 அக்டோபர் 08 .


காவலர்கள் கண்காணித்துக் கொண்டிருக்கையில் கற்பழிக்கப்பட்டதாக அருள்சகோதரி மீனா பார்வா கூறியுள்ளார் .24 அக்டோபரில் டெல்லியில் உள்ள இயேசுசபையினரின் சமூக நிறுவனத்தில் சகோதரி மீனா செய்தி வழங்கியுள்ளார். சம்பவம் நிகழ்ந்து 2 மாதங்களுக்குப் பின்னர் அவர் நாணத்தையும் அதிர்ச்சியையும் விடுத்து நடந்த குற்றம் பற்றி அறிவித்துள்ளார் .தீவிரவாத இந்துமதத்தினர் இழைத்த வன்முறைகளையும் , கற்பழிப்பையும் இத் தீமைகளுக்குக் காவலர்கள்கள் துணைபோன கொடுமையும் விளக்கிக் கூறினார் .காந்தமால் மாவட்டத்தில் நுவாகாவோன் என்ற இடத்தில் மறைமாவட்ட மறைப்பணி நிலையம் திவ்யஜோதி உள்ளது . அங்கு சகோதரி மீனா பார்வா பணிசெய்துவந்தார் . அங்கு பணிசெய்த அருள்தந்தை தாமஸ் செல்லன் என்பவரும் வன்மையாகத் தாக்கப்பட்டிருந்தார் . அவரையும் தீவிரவாதக் கும்பல் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி மிகவும் கேவலமாக நடத்தியிருந்தனர் .சகோதரி மீனாவின் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு அவசியமாவதற்குக் காரணம் ஒரிசாவின் காவலர்கள் அனைத்தையும் மூடி மறைக்கப் பார்க்கிறார்கள் . இந்துத் தீவிரவாதிகளில் சிலர் அருள்சகோதரி கற்பழிப்புக்குச் சம்மதம் தெரிவித்தார் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள் . ஆகஸ்ட் 24 இல் பெரும் கும்பல் திவ்யஜோதி மாவட்ட மறைப்பணி மன்றத்தைத் தாக்க வந்தபோது சகோதரி தப்பிச் சென்று காட்டில் ஒளிந்திருக்கிறார் . மறைப்பணி மன்றம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதைப் பார்த்ததும் இரவு 8.30 மணிக்கு ஒரு இந்து நண்பர் வீட்டில் அபயம் தேடிச் சென்றிருக்கிறார் . அங்கு வந்த கும்பல் அவரை வெளியே இழுத்துச் சென்றுள்ளனர் . கொலை மிரட்டலுக்குப் பிறகு , 40-50 பேர் கொண்ட கும்பல் தந்தை செல்லனையும் பிடித்துக்கொண்டு நையப்புடைத்துக் கொண்டிருந்திருக்கின்றனர் . அவர்கள் இருவரையும் நெருப்பில் தள்ளுவதாக மிரட்டியிருக்கின்றனர் . அங்குள்ள ஜானவிகாஸ் கட்டிடத்துக்குக் கொண்டுபோய் சகோதரியின் ஆடைகளைக் கிழித்து பலர் அவர் கைகளை மிதித்துக் கொள்ள ஒரு தீயவன் கற்பழித்திருக்கிறான் . பின்னர் அரை ஆடையோடு சாலை வழியே கூட்டிச் சென்று வாணிபக் கூடம் பக்கம் கூட்டிச் சென்றிருக்கின்றனர் . அங்கிருந்த காவலர்களிடம் எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் உதவுவதாக இல்லை . பின்னர் கும்பலே சகோதரியை ஊருக்கு வெளியே இருந்த காவல் நிலையத்திற்குக் கொண்டுபோய் ஒருவனைக் காவலுக்கு வைத்துவிட்டு மற்றவர்கள் சாப்பிடச் சென்றுள்ளனர். அங்கிருந்த காவலர்களும் கயவர்களுக்கு உடந்தையே . 26 ஆம் தேதி காலை 9.00 மணிக்கு பாலிகுடாவிலிருந்து காவலர்கள் வந்து சகோதரியைக் அங்குக் கூட்டிச்சென்றுள்ளனர் . அங்கும் முதல் தகவல் அறிக்கையைப் பெற்றுக் கொள்ள மறுத்துள்ளனர் . சகோதரி எழுதிய தகவலில் இது , அது சரியில்லை எனக் கூறியுள்ளனர் . அங்கிருந்து மாலை 4.00 மணிக்கு அரசுப் பேருந்தில் ஏற்றி புவனேசுவரத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர் . ரங்கமதி வரை காவலர்கள் சகோதரியோடு கூடச்சென்றுள்ளனர். பின்னர் சகோதரி நயகார் என்ற இடத்தில் இறங்கி வேறு வாகனத்திலேறி புவனேசுவரத்துக்கு 27 ஆகஸ்ட் அதிகாலை 2.00 மணிக்குச் சென்றடைந்திருக்கிறார் . காவலர்களே தீய சக்திகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறார்கள் . மிக்க வேதனைக்கு உள்ளாகித் தப்பிப் பிழைத்துள்ள சகோதரி மீனா பார்வா மத்திய புலன் ஆய்வுத்துறை புலன் விசாரணை செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.