2008-10-24 19:29:52

ஊடகங்கள் வன்முறைகளை மறைக்கின்றன என்கிறது தொண்டு நிறுவனம்.

24 அக். 08.


தேவையில் உள்ள திருச்சபைக்கு உதவி என்ற தொண்டு நிறுவனம்

கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் உலகெங்கும் அதிகரித்து வருவதாகக் கூறுகிறது . கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றி இத்தொண்டு நிறுவனம் ஓர் ஆய்வு நடத்தியது . 2007- 2008 ஆம் ஆண்டில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 30 நாடுகளில் 17 நாடுகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்துள்ளன . அல்ஜீரியா , எரிட்ரீயா , ஈரான் , ஈராக்கு , பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் கிறிஸ்தவம் தொடர்ந்து நிலைப்பது சாத்தியப்படாது போலத் தெரிகிறது . கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவது மனித உரிமை மீறலாகும் என இங்கிலாந்து நாட்டில் இயங்கும் இத்தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் நெவில் கிர்க்ஸ்மித் கூறியுள்ளார் . ஊடகங்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளை வெளியிடுவதில்லை . அது ஊடகங்களுக்குப் பிடிப்பதில்லை என மேலும் கூறினார் . கிறிஸ்துவுக்காகத் துன்புறும் மக்களுடைய அஞ்சாமையை நாம் பாராட்டவேண்டும் எனக் கூறிய இங்கிலாந்தின் கர்தினால் மர்பி ஓகாநர் , அவ்வாறு துன்புறுவோர்க்கு நாம் செபிப்பதோடு நம் தோழமையையும் காட்டவேண்டும் எனக்கூறியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.