2008-10-24 20:40:08

இங்கிலாந்தின் பாராளுமன்றம் கருச்சோதனைக்கு அனுமதி. 24 அக்டோபர் .08.


ஆங்கிலப் பாராளுமன்றம் 3 க்கு 1 என்ற விகிதத்தில் கருச்சோதனைக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு கத்தோலிக்கத் திருச்சபை நிறையவே எதிர்ப்புத்தெரிவித்திருந்தது . இந்தச் சட்ட அனுமதிக்கு லேபர் கட்சி முழு ஆதரவையும் கொடுத்தது . ஆனால் லேபர் கட்சியின் முக்கிய , கத்தோலிக்க உறுப்பினர் , முந்நாள் ஆங்கிலேய ஆட்சியில் அமைச்சராக இருந்த ரூத் கெல்லி ஆதரவாக ஓட்டளிக்க மறுத்து விட்டார் . இந்த சட்ட அமலாக்கம் குளறுபடியான கருச்சோதனைக்கு வழி கொடுக்க உள்ளது . மனிதக் கருவையும் மிருகக் கருவையும் இணைத்துப் பார்க்கும் திட்டம் உள்ளது .ஓரினச் சேர்க்கைத் தம்பதியர் செயற்கை முறையில் கரு உண்டாக்க வழியுள்ளது . இந்தச் சட்டத்துக்கு வேறு மாற்றங்கள் எதையும் அனுமதிக்காமல் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது வாழ்வைக் காப்பாற்ற நினைத்த குழுக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது . இந்தச் சட்டம் மேல் சபைக்கு அனுப்பட்டு இவ்வாண்டின் இறுதிக்குள் சட்டமாக வாய்ப்புள்ளது .








All the contents on this site are copyrighted ©.