2008-10-23 18:21:53

மாஸ்கோவின் பிதாப்பிதா திருத்தந்தைக்கு மடல் வரைந்துள்ளார் .23 அக்டோபர் , 08 .


நேப்பிள்ஸ் நகரின் பேராயர் கர்தினால் கிரஷென்சியோ சேப்பே , மாஸ்கோ மற்றும் ரஷ்யாவுக்கான பிதாப்பிதா 2 ஆம் அலெக்சிக்கு இம்மாதம் முதல் தேதி திருத்தந்தையின் மடலைக் எடுத்துச் சென்று கொடுத்தார் . பிதாப்பிதா 2 ஆம் அலெக்சி , திருத்தந்தைக்கு பதில் மடலை கர்தினால் வழியாக அனுப்பியிருந்தார் . மடலுக்கு நன்றி கூறியுள்ள பிதாப்பிதா , அவருடைய வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் திருத்தந்தைக்குத் தெரிவித்துள்ளார் .



இரு திருச்சபைகளுக்குமிடையே உறவு வலுப்படுவதைப் பாராட்டியுள்ளார் . இரு திருச்சபைகளுக்கும் அடிப்படையும் ஆதாரமும் ஒன்றே எனக் கூறியுள்ளார் . பல கொள்கைகளில் கருத்து ஒற்றுமையிருப்பதைக் கண்டு மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார் . இரு திருச்சபைகளுக்குள்ளும் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து அன்பே கடவுள் என்ற தூய யோவானின் திருவசனப்படி நாம் ஒன்றுபட்டு கிறிஸ்துவத்தின் நல்ல மதிப்பீடுகளை இன்றைய உலகுக்கு வழங்குவோம் எனக் கூறி நலம் விசாரித்து , கடவுளின் அருள்மழை வேண்டி விடைபெற்றுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.