2008-10-23 18:33:38

ஐ .நா சபையின் 63 ஆவது ஆண்டு விழா இந்த வெள்ளியன்று கொண்டாடப்படுகிறது . 23 அக். 08 .


ஐ.நாவின் பொதுச்செயலர் பாங்கி மூன் விழாச் செய்தியாக இந்த ஆயிரமாவது ஆண்டின் குறிக்கோள்களில் பாதி அளவே நாம் முடித்திருக்கிறோம் . இது நாம் 21 ஆவது நூற்றாண்டில் சிறப்பானதோர் உலகை உருவாக்கும் திட்டமாகும் . எத்தனையோ தடைகள் குறுக்கிடுகின்றன. உலக வெப்ப நிலை , பரவிவரும் நோய்கள் , போர்க்கருவிகளின் பெருக்கம் , தீவிரவாதிகளின் வன்முறைகள் என தடைகள் வந்தாலும் உலகத்தில் பொது நன்மையையும் , பொது உடைமையையும் கொண்டு வருவோம் எனக்கூறியுள்ளார் . காலம் தாழ்த்தாது குறிக்கோள்களை அடைந்திட முயல்வோம் . பாதுகாப்பான , நலமான , வளமான உலகை உருவாக்க அனைத்து நாடுகளின் உறுப்பினர்களும் கரம் சேர்ப்போம் என அறைகூவல் விடுத்துள்ளார் பாங்கி மூன் .








All the contents on this site are copyrighted ©.