2008-10-23 13:42:21

அக்டோபர் 24 – புனித அந்தோணி மரிய கிளாரட்


அக்டோபர் 24 – ஸ்பெயினின் காத்தலோனியாவில் 1807 ஆம் ஆண்டில் பிறந்தவர் புனித அந்தோணி. இவரது தந்தை செய்து வந்த துணி நெய்யும் தொழிலை இவரும் சிறுவயதில் செய்து வந்தார். கிடைக்கும் நேரத்தில் இலத்தீன் மொழியையும் அச்சுப் பதிக்கும் தொழிலையும் கற்றார். இவர் தமது 23வது வயதில் குருமடத்தில் சேர்ந்து 28வது வயதில் குருவானார். மறைபரப்பு நாடுகளுக்குச் செல்லும் ஆவலில் இயேசு சபையில் சேர்ந்தார். ஆயினும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர் தாயகம் சென்று மறைப்பணி செய்யுமாறு அனுப்பப்பட்டார். ஸ்பெயினில் மறைப்பணி ஆற்றி வந்த போது திருநற்கருணை மற்றும் அமலமரி திருஇதய பக்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இந்தச் சூழ்நிலையில் இவரைப் போல் நோக்கம் கொண்ட சில குருக்களுடன் சேர்ந்து கிளேரிஷியன்கள் என அழைக்கப்படும் மரியின் அமலஇதய மறைபோதகப் புதல்வர்கள் துறவு சபையை நிறுவினார். இவரது விருப்பத்திற்கு மாறாக அரசி 2ம் இசபெல்லாவின் ஆன்மீகக் குருவானார். ஸ்பெயினிலும் கியூபாவிலும் ஏற்பட்ட குருக்களுக்கெதிரான கிளர்ச்சியில் 1868இல் குரு அந்தோணியும் அரசியும் நாடுகடத்தப்பட்டனர். எனினும் விசுவாசத்தில உறுதியாய் இருந்தார். முதல் வத்திக்கான் பொதுச் சங்கத்தில் திருத்தந்தையின் தவறாவரம் பற்றித் திறமையாகப் பேசி அனைவரின் பாராட்டையும் பெற்றார். இன்று இவரது கிளேரிஷியன் சபையினர் இந்தியா உட்பட உலகின் 62 நாடுகளில் நற்பணியாற்றுகின்றனர்.

சிந்தனைக்க – நெருப்புப் பொறியை வைக்கோல் போருக்குள் மறைத்து வைக்க முடியுமா

 








All the contents on this site are copyrighted ©.