2008-10-23 20:27:06

ஒரிசாவில் புலன் விசாரணை உண்மையைத் தெரிவிக்காது,பேராயர். 231008.


கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஒரிசாவில் நடந்துவரும் வன்முறைகளைப் பற்றி ஆராயும் ஒரிசா அரசு நம்பத்தக்கதல்ல என ஒரிசா மாநிலத் தலைநகர் புவனேசுவரம் மற்றும் கட்டாக் மறைமாவட்டப் பேராயர் இரபேல் சீனத் கவலையைத் தெரிவித்துள்ளார் . இதுபற்றி இம்மாதம் 21 ஆம் தேதி செய்தி ஊடகங்களுக்குப் பேட்டி வழங்கிய பேராயர் புலன் விசாரணைக்கு ஒரு குழுவை அமைத்தபோது பாதிக்கப்பட்டவர்களையோ , அவர்களின் பிரதிநிதிகளையோ கலந்து பேசவில்லை எனக் கூறினார் . 58 உயிர்களைப் பலி கொடுத்திருக்கும் கிறிஸ்தவ சமுதாயத்தைப் புறக்கணித்து தன் விருப்பப்படி ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி எஸ் .சி .மோகாபத்திராவை அரசு ஆய்வு நடத்தக் கோரியுள்ளது . வன்முறைகளால் 4500 வீடுகள் நாசமாகியுள்ளன , 100 ஆலயங்கள் நொறுக்கப்பட்டுள்ளன . வன்முறைகள் இந்து சமயத்தவர்களுக்கும் , கிறிஸ்தவர்களுக்கும் இடையே நடக்கவில்லை. சமயத்தின் பெயரால் தாக்குதல் நடத்துபவர்கள் இந்துக்களுக்கு எதிரான , இந்தியத் தேசத்துக்கு எதிரானவர்கள் எனப் பேராயர் கூறியுள்ளார் . இதற்கு முன்னர் வன்முறைகளை ஆய்வு செய்த உயர்நீதி மன்ற நீதிபதி பாசுதேவ் பனிகிராகி தீயசக்திகளின் தீமைகளை மறைப்பதில் முனைப்பாக இருந்தார் . மாநில அதிகாரிகளைக் குற்றத்திலுருந்து காப்பாற்ற அவசர அவசரமாகப் புலன் விசாரணை செய்து ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தார். ஒரிசாவல் அனைவரும் பாரதத்தின் அரசு சாசனத்தையும் சட்டதிட்டங்களையும் கடைப்பிடிக்க வேண்டும் எனப் பேராயர் மேலும் கூறியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.