2008-10-22 16:18:31

ஒரிசாவில் தாக்குதல்கள் தொடர்வதால் பயிர் விளைச்சலும் அறுவடையும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன


அக்.22,2008 ஒரிசாவின் காந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதால் அப்பகுதியில் பயிர் விளைச்சலும் அறுவடையும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 4300க்கும் மேற்பட்ட வீடுகள் வன்முறைகளால் தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில் காந்தமாலின் 50 ஆயிரம் கிறிஸ்தவர்கள் இரண்டு மாதங்களாகக் காடுகளிலும் அரசு முகாம்களிலும் வாழ்வதால் இவர்களின் பூர்வீகத் தொழிலான மஞ்சள் மற்றும் இஞ்சி பயிரிடுதல் வெகு அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐ செய்தி கூறுகிறது.

பயிர் விளைச்சல் இன்மையும் வருமானப் பாதிப்பும் அத்தலித் மக்களின் வருங்காலத்தையே அச்சுறுத்துவதாக உள்ளது என செய்தி மேலும் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.