2008-10-22 16:17:34

ஒரிசா மாநில அரசின் நீதி குறித்த நடவடிக்கையில் நம்பிக்கை இல்லை – ஒரிசா பேராயர்


அக்.22,2008. ஒரிசாவில் இந்து தீவிரவாதிகளால் கிறிஸ்தவர்க்கு எதிராக நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்வதற்கென அரசு அமைத்துள்ள குழு நம்பக்கூடியதாய் இல்லை என்று கட்டாக் புவனேஷ்வர் பேராயர் இரபேல் சீனத் குற்றம் சாட்டினார்.

பேராயர் சீனத் இன்று வெளியிட்ட அறிக்கையில், அரசு நியமித்துள்ள இரண்டு நீதிபதிகள் மீது தனக்கு நமபிக்கை இல்லை என்று சொல்லியுள்ளதோடு, உண்மையிலேயே மிகவும் வெட்கத்துக்குரிய செயல்களைச் செய்த மாநில அரசு மற்றும் அதன் காவல்துறையின் நடவடிக்கைகளை அவர்கள் மூடிமறைக்க முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது என்று கூறியுள்ளார்.

இந்து தீவிரவாதிகளால் சேதப்படுத்தப்பட்ட ஆலயங்களின் சீரமைப்புக்கு அரசு நிதி தர மறுக்கின்றது என்றும் பேராயரின் அறிக்கை கூறுகிறது.

நீதிபதி மொகபாட்ரா தலைமையிலான உண்மையை அறியும் குழுவை நியமித்த போது பாதிக்கப்பட்ட சமூகத்திடம் அரசு கலந்தாலோசிக்கவில்லை என்று கூறும் பேராயரின் அறிக்கை, வன்முறைகள் தொடர்ந்து இடம் பெறுகின்றன, பல கிறிஸ்தவர்கள் அடுத்தவேளை உணவுக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் இன்னும் காடுகளில் மறைந்து வாழ்கின்றனர் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.