2008-10-22 19:57:53

இலண்டனில் இந்நூற்றாண்டுக்கான துறவியர் வாழ்வு பற்றி்க் கருத்தரங்கு.2210.


இலண்டனின் ஹெய்திராப் கல்லூரியில் துறவியர் சபைகளின் 160 தலைவர்கள் அக்டோபர் 18 இல் ஒன்று கூடினர் . பிரிட்டனில் இந்நூற்றாண்டில் துறவற வாழ்வு எவ்வாறு அமைய வேண்டும் எனத் கலந்து பேசினர் . கல்வியறிவாலும் ஆராய்ச்சியாலும் கிறிஸ்தவ துறவற வாழ்வுக்கான இறையியல் பார்வையை ஊக்குவிப்பதற்கு திட்டமிடுவதாக செயலாக்கச் செயலாளர் அருள் சகோதரி ஜெம்மா சிம்மண்ட்ஸ் தெரிவித்தார் . இது 2010 ஆம் ஆண்டிலிருந்து அறிமுகமாக உள்ள சிறப்பக்கல்வி வழியாகச் சாத்தியமாகும் எனக் கூறினார் . சிறப்புப் பேச்சாளர் அருள்தந்தை கிரகோரி கோலின்ஸ் பேசுகையில் வத்திக்கான் திருச்சங்கத்துக்குப் பிறகு வந்துள்ள புதிய பார்வையினை கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கூறினார் . துறவியரின் கற்பு நெறி , ஏழ்மை , கீழ்ப்படிதல் ஆகிய உறுதிப்பாடுகள் வழியாக நாம் இவ்வுலகில் நல்ல மாற்றம் கொண்டுவரும் அடையாளமாகக் கொண்டுள்ளோம் எனக் கூறினார் . கிறிஸ்து நற்கருணையில் பிரசன்னமாகி மாற்றத்தை உண்மையானதாக்குகிறார் என மேலும் கிளெண்ஸ்டன் துறவுமடத்தின் அதிபர் கோலின்ஸ் கூறினார் . துறவியர் 21 ஆம் நூற்றாண்டுக்காகச் சிறப்புப் பயிற்சி பெற ஹெய்திராப் கல்லூரியில் இறையியல் , தத்துவம் , மற்றும் உளவியலில் சிறப்புக் கல்வி வழங்கப்பட உள்ளது .








All the contents on this site are copyrighted ©.