2008-10-21 13:54:46

ஒரிசாவில் மேலும் வீடுகள் எரிப்பு – ஆயர்கள் கவலை


அக்.21,2008. ஒரிசாவில் நிலைமை சுமுக நிலைக்குத் திரும்பியுள்ளது என்று அரசு கூறினாலும், கிறிஸ்தவர்களின் வீடுகள் தொடர்ந்து எரிக்கப்பட்டு வருவதால், காந்தமால் மாவட்ட கிறிஸ்தவர்கள் மாநில அரசு மீது நம்பிக்கை இழந்து இருக்கின்றனர் என்று ஆயர்கள் கூறினர்.

அரசியல் அமைப்பின் ஒழுங்குப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தங்களின் வாழ்வதற்கான உரிமையை முழுவதும் எடுத்துவிட்டது என்று கிறிஸ்தவர்கள் நம்புவதாக ஆயர்களின் அறிக்கை மேலும் கூறுகிறது.

காந்தமால் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமலில் இருந்தாலும், இந்து தீவிரவாதக் குழுக்கள் கையில் விளக்குகளுடன் சுற்றி வந்து வீடுகளைச் சேதப்படுத்துகின்றனர் என்று கட்டாக் புவனேஷ்வர் உயர் மறைமாவட்ட சமூக மையத் தலைவர் அருட்திரு மனோஜ் டிகால் கூறினார்.

மக்களையும் பொருட்களையும் அழித்த பின்னர் தற்சமயம் வீட்டுப் பிராணிகளை அழித்து வருகின்றனர் என்றும் அக்குரு தெரிவித்தார்.

அரசு அமைத்திருந்த அகதிகள் முகாம்களைவிட்டு ஏறத்தாழ 12 000 கிறிஸ்தவர்கள் வெளியேறி அண்டை மாநிலங்களில் அடைக்கலம் தேடியுள்ளனர் என்றும் குரு மனோஜ் அறிவித்தார்








All the contents on this site are copyrighted ©.