2008-10-21 19:50:52

இலங்கையின் பிரச்சனையில் இந்தியா தலையிடுவதாகப் புகார். 21 அக்.-08.


இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் போரிட்டுக் கொண்டிருக்கும் இலங்கையில் அமைதி நிலைநாட்டுமாறு கேட்டுக் கொண்டதற்கு இலங்கை அரசும் அந்நாட்டில் சிங்களம் பேசும் புத்தமதத்தைச் சேர்ந்தவர்களும் இந்தியப் பிரதமர் அங்குத் தலையிடுவதாகக் கூறியுள்ளனர் என்று ஆசியச் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது . தமிழ் விடுதலைப் புலிகளின் வடபகுதி எல்லைக்குள் முன்னேறிக் கொண்டிருக்கும் இலங்கை இராணுவம் போரைத் தீவிரப் படுத்தியுள்ளதால் நிலைமை மிக மோசமாகியுள்ளது . புது டெல்லி இலங்கையில் நிலைமை மோசமாகியுள்ளதால் கவலை தெரிவித்துள்ளது . அப் பகுதியில் கடுந்துயருக்கு உள்ளாகி இருப்பவர்கள் அப்பாவித் தமிழ்ப் பொது மக்களே . இலங்கை அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும், சிங்களம் பேசும் புத்த மதத்தவரும் இந்தியா அதனுடைய உள் விவகாரத்தில் தலையிடுவதாகக் கூறி கொதித்தெழுந்துள்ளனர் . இராணுவத்தைப் பயன்படுத்துவது ஒன்றுதான் அமைதிக்கு வழி என எண்ணக் கூடாது என்றும் என்ன விலை கொடுத்தும் பொது மக்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என்றும் இந்தியப் பிரதமர் இலங்கையின் குடியரசுத்தலைவர் மகிந்தா இராஜபக்சாவுக்குத் தொலைபேசி வழி அக்டோபர் 18 இல் கூறியுள்ளார் . இதற்கிடையில் இலங்கை இராணுவம் அதன் வீரர்களின் உயிரைப் பணயம் வைத்து , 33 வீரர்கள் உயிரை இழக்கவும் , 48 பேர் காயமடையவும் கிளிநொச்சிப் பகுதியில் முன்னேறி வருவதாக ஆசியச் செய்தி கூறுகிறது . தமிழ் விடுதலைப் புலிகள் பதுங்கு குழிகள் அமைத்துக் கடுமையாகப் போரிட்டு வருகின்றனர் . இலங்கை அரசு வான் வழித் தாக்குதலையும் தரைவழித் தாக்குதலையும் தொடர்ந்து நடத்தி வருகிறது .








All the contents on this site are copyrighted ©.