2008-10-18 13:30:21

உலக மறைப்பணி ஞாயிறு – அகிலத் திருச்சபையின் ஒருமைப்பாட்டுணர்வின் அடையாளம்


அக்.18,2008 கத்தோலிக்கத் திருச்சபையின் மறைப்பணியில் உலகளாவிய ஒருமைப்பாட்டுணர்வைக் காட்டுவதன் அடையாளமாக உலகின் ஒவ்வொரு பங்குத்தளமும் அக்.19, இஞ்ஞாயிறன்று 82வது உலக மறைப்பணி ஞாயிறைச் சிறப்பிக்கின்றது.

இவ்வுலக தினத்தைச் சிறப்பிக்க அழைப்பு விடுக்கும் விசுவாசப்பரப்புக் கழகம் உலகில், குறிப்பாக, அடிக்கடி கடும் இன்னல்களை எதிர்நோக்கும் ஆப்ரிக்கா மற்றும் ஆசிய இளம் திருச்சபைகளுக்கு உடனடி ஆதரவு தேவைப்படுகின்றது என்று கூறியது.

இயேசுவை பிறர் அறிய உதவுதல் எனும் தலைப்பில் சிறப்பிக்கப்படும் இத்தினத்தன்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எடுக்கப்படும் காணிக்கைகள், 194,855 பள்ளிகள், 5246 மருத்துவமனைகள், 17,530 மருந்தகங்கள், 577 தொழுநோய் மையங்கள், 80,560 சமூக மற்றும் மேய்ப்புப்பணி திட்டங்களுக்கென செலவழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசுவாசப்பரப்புக் கழகம் உலகில் 1075 மறைப்பணித்தளங்களின் மறைமாவட்டங்களின் வளர்ச்சிக்கு உதவி வருகிறது.








All the contents on this site are copyrighted ©.