2008-10-16 19:33:19

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு அமர்வில் செலஸ்டீனோ மிலியோரே.

16 அக். 08


உலகெங்கும் மலேரியாவை ஒழித்திடுவது பற்றி ஐக்கிய நாடுகள் சபைத் தலைவர் கருத்தாய்வுத் திட்டத்தை முன் வைத்தார் . 2001 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டுக்குள் முக்கியமாக ஆப்பிரிக்காவில் மலேரியா ஒழிக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது . விழிப்புணர்வாலும், இது பற்றிய கல்வியைப் புகட்டுவதாலும் , இதை ஒழிக்க ஆவன செய்வதாலும் இந்நோயை முறியடிக்க முடியும் என எடுத்துரைத்தார் ஐ.நாவின் வத்திக்கானுக்கான நிரந்தர உறுப்பினர் பேராயர் செலஸ்டீனோ மிலியோரே . கடந்த 15 ஆண்டுகளில் இந்நோய் அதிகரித்துள்ளது . அதனால் சாவும் அதிகரித்துள்ளது . அகில உலகமும் இதை ஒழிக்க முனைப்போடு செயல்பட வேண்டும் எனப் பேராயர் மிலியோரே எடுத்துரைத்தார் . எச். ஐ .வி , எய்ட்ஸ் , எலும்புருக்கி நோயான டி. பி. போன்றவைகளை தீவிரமாக ஒழிக்க முயலும் தற்பொழுது அதன் காரணமாக மலேரியாவை ஒழிப்பதை ஓரம் கட்டக்கூடாது என்று கூறிய பேராயர் மிலியோரே , மனித உயிருக்கு ஊறு விளைவிக்கும் எல்லா நோய்களையும் கட்டுப்படுத்த உலகம் எனும் குடும்பம் முயல வேண்டும் என வேண்டுகோள் வைத்தார் .








All the contents on this site are copyrighted ©.