2008-10-16 20:01:24

அகில உலகத்திருச்சபைக் கழகம் இந்தியாவைப் பார்வையிட உள்ளது .16 அக்.-08


அகில உலகத் திருச்சபைக் கழகத்தின் பிரதிநிதிகள் வன்முறை நிகழும் இந்தியாவையும் இலங்கையையும் பார்வையிட உள்ளனர் . இந்நாடுகளில் கடந்த சில மாதங்களிலும் ஆண்டுகளிலும் அதிகமான வன்முறைகள் தொடர்கின்றன . அகில உலகத் திருச்சபைக் கழகத்தின் தலைமைச் செயலர் மேதகு டாக்டர் சாமுவேல் கோபியா தலைமையில் பிரதிநிதிகள் இந்நாடுகளைப் பார்வையிட உள்ளனர் . கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இக்கழகம் இந்தியாவில் நடந்து வரும் மதக் கலவரம் பற்றியும் , இலங்கையில் அதிகரித்து வரும் இனக்கலவரம் பற்றியும் கவலை தெரிவித்திருந்தது . சமய நல்லிணக்கம் இந்தியாவின் பாரம்பரியப் புதையல் எனக்கூறிய இக்கழகம் ஒரிசாவின் வன்முறைகளை முன்னரே கண்டித்திருந்தது . இம்மாதம் 16 லிருந்து 23 வரை இந்நாடுகளைப் பார்வையிடும் இக்கழகம் அக்டோபர் 17 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் பதான் கோட்டில் நடக்கவுள்ள மாமன்றத்தில் இதுபற்றி ஆராய உள்ளது. அவர்கள் வருகையின்போது டெல்லியில் மெதடிஸ்ட் சர்ச் , கத்தோலிக்க ஆயர்குழு , மற்றும் தேசியத் தலைவர்களைச் சந்திப்பார்கள் . இலங்கையில் திருச்சபைத் தலைவர்களைச் சந்திப்பார்கள் . அக்டோபர் 20 இல் இலங்கையில் புத்த , இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களின் பிரதிநிதிகளைச் சந்திக்க உள்ளனர் .








All the contents on this site are copyrighted ©.