2008-10-15 13:58:51

லெக்சியோ திவினா தெய்வீக வாசிப்பு முறை இலங்கை தலத்திருச்சபையின் புதுப்பித்தலுக்கு உதவுகிறது – மன்னார் ஆயர்


அக்.15,2008. லெக்சியோ திவினா என்ற தெய்வீக வாசிப்பு செப முறை இலங்கை தலத்திருச்சபையின் புதுப்பித்தலுக்கு உதவுகிறது என்று மன்னார் ஆயர் ஜோசப் இராயப்பு உலக ஆயர்கள் மாமன்றத்தில் கூறினார்.

236 பேரவைத் தந்தையர்கள் பங்கு கொண்ட இன்றைய காலை பொது அமர்வில் உரையாற்றிய ஆயர் ஜோசப், ஏறத்தாழ 25 ஆண்டுகளாக இனச் சண்டை இடம் பெற்று வரும் இலங்கையில் மக்களின் வாழ்வும் உடமைகளும் அழிக்கப்பட்டு பெருமளவில் மக்கள் புலம் பெயருகின்றனர் என்றார்.

வாழ்வே கேள்விக் குறியாகியுள்ளவேளை, மக்களின் இத்துன்பநிலையைப் பயன்படுத்தி கிறிஸ்தவப் பிரிவினைவாதக் குழுக்கள் மக்களைப் பெருமளவில் தங்கள் பக்கம் இழுத்து வருகின்றன என்றார்.

மன்னாரில் 35 விழுக்காட்டினர் கத்தோலிக்கர், மற்றவர்கள் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் என்றுரைத்த ஆயர், அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வது பற்றியும் குறிப்பிட்டார்.

இன்னும் இன்று உரையாற்றிய கேரளாவின் சீரோ மலங்கரா ரீதி பேராயர் ஐசக் கிலீமிஸ் தொட்டுன்கல், இறைவார்த்தையில் ஆழமாக வேரூன்றிய பாரம்பரியத்தைக் கொண்டிருக்கும் சீரோ மலங்கரா ரீதி சபை, தன் விசுவாசிகள் இறைவார்த்தையின்படி வாழ அழைப்புவிடுக்கிறது என்றார்.








All the contents on this site are copyrighted ©.