2008-10-11 14:31:55

அக்டோபர்10 - சர்வதேச மரண தண்டனை ஒழிப்பு தினம்


அக்.11,2008. உலகில் பாதிக்கு மேற்பட்ட நாடுகளில் மரண தண்டனை சட்டமும் அது நடைமுறைப்படுத்தப்படுவதும் இரத்து செய்யப்பட்டிருந்தாலும் உலக அளவில் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது என்று ஐரோப்பிய அதிகாரி ஒருவர் கூறினார்.

சர்வதேச மரண தண்டனை ஒழிப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டதை முன்னிட்டு கருத்து தெரிவித்த ஐரோப்பிய அண்டை நாடுகளுக்கான கொள்கைக் குழுவின் தலைவர் பெனிட்டா பெரெரோ வால்டுனர், உலகில் 137 நாடுகள் மரண தண்டனை சட்டத்தை இரத்து செய்துள்ளன, எனினும் 2007 ஆம் ஆண்டில் 24 நாடுகளில் குறைந்தது 1252 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.

51 நாடுகளில் குறைந்தது 3347 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளவர்களில் 80 விழுக்காடு சீனா, ஈரான், செளதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இடம் பெற்றுள்ளன என்றும் அவர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.