2008-10-10 14:33:58

பேரவைத் தந்தையர்கள்


அக்.10,2008. திருச்சபையின் வாழ்விலும் பணியிலும் இறைவார்த்தை என்ற தலைப்பில் நடைபெறும் 12 வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் இன்றைய காலை பொது அமர்வு திருத்தந்தை 16ம் பெனடிக்டின் முன்னிலையில் சிட்னி பேராயர் கர்தினால் ஜார்ஜ் பெல் தலைமையில் தொடங்கியது. இதில் 237 பேரவைத் தந்தையர்கள் கலந்து கொண்டனர். காலை இடைவேளையில் திருத்தந்தை, 24 மற்றும் 23 உறுப்பினர்களைக் கொண்ட இரண்டு ஸ்பானிய குழுக்களைச் சந்தித்தார். இந்தியாவின் ஹசாரிபாக் ஆயர் சார்லஸ் சொரேங், நாகசாகி பேராயர் ஜோசப் மிட்சுவாக்கி தாக்காமி, யாங்கூன் பேராயர் சார்லஸ் மவுங் உட்பட பல நாடுகளின் 29 பேரவைத் தந்தையர்கள் உரையாற்றினர்.

இறைவார்த்தையை வாசித்து ஒருவர் மற்றவருடன் பகிர்ந்து கொண்டு அதற்கு சாட்சி பகர்வது முக்கியம் என்று நாகசாகி பேராயர் ஜோசப் கூறினார்.

இன்னும் இம்மாமன்றத்தின் முடிவில் செய்தி வெளியிடுவதற்கான குழுவின் தலைவராக திருப்பீட கலாச்சார அவையின் தலைவரான பேராயர் ஜான்பிரான்கோ ரவாசி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் குவாகாத்தி பேராயர் தாமஸ் மெனாம்பரம்பில் உட்பட 10 பேர் இக்குழுவின் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்







All the contents on this site are copyrighted ©.